Tuesday, August 01, 2006

ஓரு புதிர்

நீங்க ஓரு அறையில் இருக்கறீங்கன்னு வச்சிக்குவோம். அந்த அறையில் 3 சுவிட்சிகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றே ஒன்று மட்டுமே பல்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதி இரண்டும் சும்மா உள்ளது. மேலும், இணக்கப்பட்ட பல்பு கூட பக்கத்து அறையில் உள்ளது.

இப்ப பிரச்சணை என்னவென்றால், எந்த சுவிட்ச் பல்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட விதிகளுடன் நீங்க கண்டுபிடிக்கணும்.

1. எந்த சுவிட்சை எத்தணை முறை வேண்டுமானலும் நீங்க போட்டு நிறுத்தலாம்.
2. பக்கத்து அறையில் பல்பு எரிவது உங்க அறையிலிருந்து தெரியாது
3. பக்கத்து அறைக்கு அதிகபட்சம் ஓரு முறை போய் விட்டு வரலாம்.


விடையைக் காண இடுகைகளைப் படிக்கவும்

13 Comments:

Blogger புதுமை விரும்பி said...

பதில் எனக்குத் தெரியுமுங்க. ஆனா, மற்றவர்களும் பதில் கண்டுபிடிக்க முயற்சி செய்யட்டும்.
மறுபடியும் வர்றேன்.

August 01, 2006  
Blogger காழியன் said...

உலகத்துல எண்ண மாதிரி மேலும் சில அறிவாளிங்க இருக்காங்க போல

August 01, 2006  
Blogger கோவி.கண்ணன் said...

இது ரொம்ப சிம்பிள் ... ஆன் சென்று பாருங்கள் :)

August 01, 2006  
Blogger காழியன் said...

சரி, சென்று பார்க்கிறேன், ஆனால் பல்பு எரியவில்லை என்றால்.....?

August 01, 2006  
Blogger சிறில் அலெக்ஸ் said...

உண்மையான புதிரா ..அல்லது உங்க நண்பனை போய் பார்க்கச்சொல்லுங்கன்னு ஏதாவது சொல்லப்ப்போறீங்களா..

ரெம்ப யோசிக்க வைக்கிறீர்கள்.
பதில் என்ன? மண்டை வெடிக்குமுன் சொல்லவும்.

August 01, 2006  
Blogger இலவசக்கொத்தனார் said...

கண்டுபிடிச்சிட்டேன். கண்டுபிடிச்சிட்டேன்.

யுரேகா. யுரேகா.

என்னது? ட்ரெஸ் எல்லாம் போட்டு இருக்கேனா? அட ஒரு பேச்சிக்கு யுரேகான்னு சொன்னா... அதெல்லாம் போட்டுகிட்டுதாங்க இருக்கேன்...

August 01, 2006  
Blogger சீமாச்சு.. said...

என்ன இன்னும் யாரும் கண்டுபிடிக்கலையா?
மூணு ஸ்விட்சையும் ஒரே நேரத்துல ஆன் பண்ணுங்கள்.. (அப்படி பண்ணக்கூடாதுன்னு ஒண்ணும் சொல்லலையே..) அப்புறம் தேவைப்பட்டால் அடுத்த அறைக்குச் சென்று பாருங்கள்..

சரிதானே..
சீமாச்சு

August 01, 2006  
Blogger காழியன் said...

//மூணு ஸ்விட்சையும் ஒரே நேரத்துல ஆன் பண்ணுங்கள்//
ஐயா சீமாச்சு....3 சுவிட்சையும் போட்டால் பல்பு எரியாதா இல்லையான்னுதான் கண்டுபிடிக்க முடியுமே தவிர எந்த சுவிட்ச் எந்த பல்புடன் இணைக்கப்பட்டுள்ளதுன்னு எப்படி தெரியும்?

August 01, 2006  
Blogger காழியன் said...

சிறில்..

//உண்மையான புதிரா //

அக்மார்க் முத்திரை குத்தின புதிர், கடி ஜோக் அல்ல

//மண்டை வெடிக்குமுன் சொல்லவும்.//

உங்கள் மண்டையை காப்பாற்ற வேண்டுமானால் க்ளூ தருகிறேன்.

"கொஞ்ச நேரம் எரிந்தால் பல்பு சூடாகும்"

August 01, 2006  
Blogger லதா said...

I also found the answer. Thanks for the clue:-)))

August 01, 2006  
Blogger காழியன் said...

இரண்டு பேர் (சிங்கை நாதன் & லதா) சரியான பதிலை சொல்லிவிட்டதால், இதற்கு மேல் நான் பந்தா செய்ய முடியாது என்பதால் பதில் இங்கே....

1. மூன்று சுவிட்ச்களில் முதல் சுவிட்சை போட்டு 2 நிமிடங்கள் கழித்து நிறுத்தவும்.
2. பின் 2ம் சுவிட்சை போட்டுவிட்டு பக்கத்து அறைக்கு செல்லவும்.
3. அறையில் பல்பு எரிந்து கொண்டிருந்தால் விடை 2ம் சுவிட்ச்.
4. அறையில் பல்பு எரியவில்லை ஆனால் பல்பு சூடாக இருந்தால் விடை முதல் சுவிட்ச்.
5. அறையில் பல்பு எரியவும் இல்லை, பல்பு சூடாகவும் இல்லை என்றால் விடை 3ம் சுவிட்ச்.

August 02, 2006  
Blogger காழியன் said...

சிங்கை நாதன்..

//நீங்கள் ஆரணி தேவிகாபுரமா?//
ஆமாம்

//ராஜ சேகரன் தெரியுமா?//
தெரியும், ஆனால் அவர் புதுத் தெருவை சேர்ந்தவரா எனக் கூறவும்.

August 02, 2006  
Blogger காழியன் said...

//ஆள் நல்ல வாட்ட சாட்டமாய் இருப்பான்//
அப்ப அவரேதான்...ஆனால் எங்கு உள்ளார் போன்ற விசயங்கள் தெரியாது.

August 02, 2006  

Post a Comment

<< முற்றத்திற்குச் செல்ல