Wednesday, August 02, 2006

கேட்டால் மட்டும் கொடுங்க...தட்டினா மட்டும் திறங்க...

புதியதாய் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த ஒருவர் கையில் சில காகிதங்களை வைத்துக் கொண்டு பேப்பர் ஷ்ரட்டர் மெஷின் அருகே சென்று
காகிதத்தை இயந்திரத்தினுள் உள்ளே எப்படி போடுவது என யோசித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட சக ஊழியர் "நான் உங்களுக்கு உதவட்டுமா?" எனக் கேட்டுக் கொண்டே காகதங்களை வாங்கி இயந்திரத்தினுள் விட்டார்.

ஆனால் புதிய ஊழியர் இடத்தை விட்டு நகராமல் இயந்திரத்தின் மறு பக்கத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்

இதைக் கண்ட சக ஊழியர் "என்ன எதிர் பார்க்கிறீர்?" என்றார்

"இல்ல..நான் கொடுத்த காகிதங்களின் ஜெராக்ஸ் பிரதி எந்தப் பக்கம் வருமென பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் புதிய ஊழியர்.

2 Comments:

Blogger நன்மனம் said...

தட்னாஆஆஆங்க பாரு (தங்கவேலு ஸ்டைல்ல படிக்கவும்)

முதுகு இருந்துதா அந்த சக ஊழியருக்கு :-)

August 02, 2006  
Blogger காழியன் said...

நன்மனத்தாருக்கு ஏனோ 'சக ஊழியர்'-ன் மேல் இவ்வளவு கரிசணம்?....அனுபவமோ?

August 02, 2006  

Post a Comment

<< முற்றத்திற்குச் செல்ல