Tuesday, August 29, 2006

ஓடி ஓடி உழைக்கணும்....

குப்பன் ஒரு வழியாக வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். பிரிவுபச்சார விழா முடிந்து வீடு வந்தவர் தனது சமையற்காரர் சுப்பனை கூப்பிட்டு "இனி எனக்கு ஓய்வூதியம் மட்டும்தான் வரும், சம்பளம் கிடையாது. அதனால் இனி விதவிதமாக சமைக்காமல் ஒரு சாம்பார் ஒரு பொறியல் மட்டும் போதும்" என்றார். அதற்கு சுப்பன், "சரி முதலாளி" என்று கூறிவிட்டு சமைக்கச் சென்றுவிட்டான்.

மதியம் சாப்பாடு குப்பன் கூறியவாரே இருந்து. உண்ட பின் நீர் அருந்த சமையல் அறைக்கு சென்ற குப்பன் அங்கு கண்ட காட்சியைக் கண்டு அதிர்ந்தார். காரணம் சுப்பன் "சாதம், முருங்கைக்குழம்பு, தக்காளி இரசம், தாளித்த தயிர், புடலங்காய்க் கூட்டு, உருளைப் பொறியல், அரிசி அப்பளம், மாங்காய் ஊறுகாய், வெள்ளரிக்காய் பச்சடி" என ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான். உடனே குப்பன் "எளிமையாய் சமைக்கச் சொன்னால் நீ இப்படி வித விதமாக சமைத்து இருக்க?" என்றார் அதிர்ச்சியுடன்.

அதற்கு சுப்பன் "முதலாளி!!, நீங்கதான் பணி ஓய்வு பெற்று இருக்கீங்க நான் இல்ல என்றான்"