Friday, July 11, 2008

பக்கத்து சீட் காலிதான?

(திரை அரங்கில்)

குப்பன்: ஏங்க உங்க பக்கத்து சீட் காலிதான?

சுப்பன்: ஆமாம், என் மனைவிக்கு டிக்கெட் வாங்கினேன் அவளால வரமுடியல.

குப்பன்: சரி, அதனால் என்ன, உங்க நண்பர் யாரையாவது அழைத்து வந்திருக்கலாமே?

சுப்பன்: அவங்க யாரும் வரமுடியாது, எல்லோரும் என் மனைவியோட இறுதி ஊர்வலத்துல இருக்காங்க.

Labels: ,

Thursday, July 10, 2008

டாக்டரே கண்கண்ட துணை

ஒரு ஆணும் பெண்ணும் டாக்டரிடம் சென்றனர்.
ஆண்: டாக்டர், எங்க செக்ஸ் வாழ்கையில பிரச்சனை இருக்கு.

டாக்டர்: என்ன பிரச்சனை

ஆண்: சொல்ல தெரியல

டாக்டர்: சரி, எனக்கு முன்னால 'தப்பு' பண்ணுங்க

('தப்பு' செய்தனர், அது முடிந்த பின்...)

டாக்டர்: ஒரு பிரச்சனையும் இல்லியே, எல்லாம் நார்மலாதான இருக்கு.

ஆண்: ரொம்ப நன்றி டாக்டர், பீஸ் எவ்வளவு?

டாக்டர்: 150 ரூ.

ஆண்: இந்தாங்க, நாங்க வர்றோம்.


அடுத்த வாரம், அதே டாக்டர், அதே ஜோடி, அதே பிரச்சனை, அதே 'தப்பு', அதே 150 ரூ பீஸ்.

மூன்றாவது வாரமும் அதே டாக்டர், அதே ஜோடி, அதே பிரச்சனை, ஆனால்...

டாக்டர் கடுப்பாகி கேட்டார், "யோவ், என்ன விளையாடுறியா?"

பதிலுக்கு ஆண், "இல்ல டாக்டர், அவங்க இடத்துக்கும் போகமுடியாது, என் இடத்துக்கும் போக முடியாது. லாட்ஜுக்குப் போன வாடகை 500 ரூ ஆகுது, அதில்லாம போலிஸ் தொல்லை வேற. இங்க வந்தா வெறும் 150 ரூபாதான், காவலுக்கு நீங்க வேற இருக்கீங்க அதான் வார வாரம் வர்றோம்" என்றானாம்.

Labels: , ,

பயமா இருந்தா கண்ணை மூடிக்கோ


பயணி: யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு.

டிரைவர்: உனக்காக மெதுவா போக முடியாது, பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.

Labels:

சந்தோசமான குடும்பம்

குப்பன்: உங்க வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே எப்படி?
சுப்பன்: என் மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
மேல படலேன்னா நான் சிரிப்பேன், மேல பட்டதுன்னா அவள் சிரிப்பா.
இப்படியே ஒரே குதூகலமா இருப்போம்.

Labels: ,

பதற்றம் VS நடுக்கம்


காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம்.

காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக்கம்.

Labels: ,

Thursday, July 03, 2008

இராணுவத்தில் ஆள் சேர்க்கும் நிகழ்ச்சி

அது ஒரு இராணுவத்தில் ஆள் சேர்க்கும் நிகழ்ச்சி.

இறுதிச் சுற்றில் இரண்டு ஆண்கள், மற்றும் ஒரு பெண் தேர்வாயினர்.
அடுத்து அம்மூவரின் கீழ்படியும் குணத்தை அறிய ஒரு சோதனை.

தேர்வாளர்: நீங்கள் ஒவ்வொருவராக இந்த அறைக்குள் சென்று உள்ளே இருக்கும் நபரை இந்த துப்பாக்கியால் சுட்டு சாகடிக்க வேண்டும்.

மூவரும்:சரி.

தேர்வாளர்: ஆனால், உள்ளேன் இருப்பது உங்கள் வாழ்க்கைத்துணை(கணவன்/மனைவி)

ஆண்1: உங்களுக்கு என்ன பைத்தியமா ?. எனக்கு வேலையே தேவை இல்ல.

ஆண்2: நான் முயற்ச்சி செய்து பார்கிறேன்.
(துப்பாக்கியை வாங்கிக்கொண்டு உள்ளே போகிறார்.
ஒரு நிமிடம் அமைதி. மறு நிம்டம் அழுதுகொண்டே வெளியே வருகிறார்)

ஆண்2: என்னால் முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

(கடைசியாக பெண். துப்பாக்கியை வாங்கிக்கொண்டு உள்ளே போகிறார்.
க்ளிக்...க்ளிக்..என இரண்டு முறை சத்தம்.
அடுத்து எதோ உடை படும் சத்தம். "ஐயோ அம்மா.." என அலறல்.
5 நிமிடங்கள் கழித்து கையில் இரத்தத்துடன் பெண் வருகிறாள்)

தேர்வாளர்: என்ன ஆச்சி?

பெண்: என்ன சார், துப்பாக்கியில குண்டே இல்ல.
வேற வழி இல்லாம நாற்காலியால் அடித்து சாகடிக்க வேண்டியதா போச்சி!!

நீதி: மனைவியை பகைக்காதே.

Labels:

மரணப் படுக்கையில் மனைவி

(மரணப் படுக்கையில் மனைவி)
மனைவி: ஏங்க..நான் செத்துட்ட பிறகு நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கணும்.

கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட நகையை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட புடவையை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட காரை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: அது மட்டும் முடியாது.
மனைவி: ஏன்
கணவன்: அவளுக்கு கார் ஓட்ட தெரியாது.

Labels:

Wednesday, July 02, 2008

கோவத்தை குறைக்க எளிய வழி

கணவன்: நான் எவ்வளவு திட்டினாலும் நீ கோபப்படாம இருக்கியே, எப்படி?

மனைவி: நீங்க திட்டின உடனே வாஷ் பேசினை கழுவ ஆரம்பிச்சிடுவேன்..உடனே எனக்கு கோவம் குறைந்து விடும்.

கணவன்: வாஷ் பேசினை கழுவினா எப்படி கோவம் குறையும்?

மனைவி: உங்களோட பிரஷை பயன்படுத்தி இல்ல வாஷ் பேசினை கழுவுறேன்.

Labels:

ரசம் vs விஷம்

நீதிபதி: ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?
கபாலி: என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான்.

Labels: ,

Tuesday, July 01, 2008

ஓட்டல் பில்

சர்வர்: வேற ஏதாவது வேணுமா?
குப்பன்: போதும், எதுவும் வேண்டாம்.
சர்வர்: அப்ப, பில் கொடுத்துடலாமா?
குப்பன்: அதான் எதுவும் வேண்டாம்ன்னு சொன்னேன் இல்ல.

Labels: