Saturday, April 22, 2006

இனிஷியல் பிரச்சனை

Labels:

அறுபதாம் கல்யாணம்

அறுபதாம் கல்யாணத்துல தாத்தா ஏன் கோவமா இருக்காரு?

இந்த கல்யாணத்துக்கும் அதே கல்யாண பெண்ணான்னு கோவமாம்

கோவத்துல இருக்குறப்ப மூடு வராது

நீதிபதி: உன் மனைவி தீக்குளிச்ச போது நீ ஏன் அணைக்கல?

குற்றவாளி: கோவத்துல இருக்குறப்ப அவளுக்கு மூடு வராது சாமி, அதனாலதான் அணைக்கல

Thursday, April 20, 2006

இன்றைய ஸ்பெஷல்..தவளை கால் வறுவல்

Labels:

எரும!.எரும!!..

ஆசிரியர்: (மாணவனைப் பார்த்து)
பிதாகரசின் தேற்றத்தை சொல்லு பார்ப்போம்

மாணவன்: தெரியாது சார்

ஆசிரியர்: எரும!.எரும!!..
நாங்க அந்த காலத்துல டாண் டாண்ணு சொல்லுவோம்

மாணவன்: ஹ்ம்ம்...என்ன பண்ணுறது சார்?...
உங்களுக்கு நல்ல வாத்தியாரு கெடச்சிருக்காரு!!

Wednesday, April 19, 2006

மல்லாக்க படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது...
தலைவலி மாத்திரை சாப்பிட்டா தலைவலி போயிடுது...
பேதி மாத்திரை சாப்பிட்டா பேதி போயிடுது...
ஆனா...
தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?

Labels:

மல்லாக்க படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம்
ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?

Labels:

கையில யானை

பைத்தியம்1: (உள்ளங்கையை மூடிக்கொண்டு) என் கையில என்ன இருக்கு சொல்லு பார்ப்போம்?
பைத்தியம்2: ம்ம்....யானை....
பைத்தியம்1: ஏய்...நான் வைக்கும் போதே பாத்துட்டேதான?

Friday, April 14, 2006

எறும்பு கூட தூக்கத்துல நடக்குமா?

நோயாளி: டாக்டர்...டாக்டர், தூங்கும் போது எறும்பு காதுக்குள்ள போயிடிச்சி
டாக்டர்: சரி விடுங்க...அந்த எறும்புக்கு தூக்கத்துல நடக்குற வியாதியா இருக்கும்

கல்யாணமான சிங்கராசா

Labels:

சொல்லி வருவதில்லை ****க் கலை

Labels:

புகுந்த வீட்டு சொந்தங்கள்

கணவணும் மனைவியும் ஒரு நாள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எருமை மாடுகள் குறுக்கே வந்தன. கடுப்பான கணவன் மனைவியைப் பார்த்து
"பாருடீ உன் சொந்தகாரங்களை எப்படி தொல்லை பண்ணுராங்க" என்றான். அதற்கு மனைவி அமைதியாக கூறினாள் "ஆமா ஆமா..எல்லாம் என் புகுந்த வீட்டு சொந்தங்கள்".

டேய் அடங்குங்கடா..







Labels:

Thursday, April 13, 2006

கட்டெறும்புக்கும்..காட்டு யானைக்கும் கல்யாணம்

மகள் எறும்பு: அப்பா நான் பக்கத்து காட்டு யானைய காதலிக்கிறேன்..கட்டிகிட்டா அவரைதான் கட்டிக்குவேன்

அப்பா எறும்பு: முடியாது..அவன் சாதி என்ன? நம்ம சாதி என்ன?

மகள் எறும்பு: சாதியைக் காட்டி உங்களால எங்க காதல பிரிக்க முடியாது

அப்பா எறும்பு: ஏன் முடியாது?

மகள் எறும்பு: ஏன்னா என் வயத்துல இப்ப அவரோட வாரிசு வளருது!!

கவணிச்சியா?.....கவணிச்சேன்

குப்பன் காலில் என்ன கட்டு?
சுப்பன் அங்க ஒரு பள்ளம் இருக்கே கவணிச்சியா?
குப்பன் ஆமாம் கவணிச்சேன்
சுப்பன் நேத்து நான் கவணிக்கல

ஊசியால் குத்தினால் இரத்தம் ஏன் வருகிறது

ஊசியால் குத்தினால் இரத்தம் ஏன் வருகிறது

தன்னை குத்தினது யாருன்னு இரத்தம் சும்மா எட்டிப் பார்க்குது.
நம்பாதவங்க சும்மா குத்திப் பாருங்க

Labels:

Wednesday, April 12, 2006

போடா...தேவாங்கு

அப்பா: டேய், தம்பிய ஏண்டா அடிச்சே
மகன்: நேத்து என்ன பார்த்து தேவாங்குன்னு சொன்னான்
அப்பா: சரி, அதுக்கு இப்ப ஏண்டா அடிச்ச
மகன்: இப்பதான் தேவாங்க டிவியில பார்த்தேன்

Tuesday, April 11, 2006

மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா
வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?

Labels:

பேச்சு பேச்சாதான் இருக்கனும்

Labels:

தேனிலவுக்குப் போகணும்

சார்..எனக்கு விடுப்பு வேணும்
எதுக்கு?
தேனிலவுக்குப் போகணும்
சரி..எத்தணை நாட்கள் வேணும்?
நீஙகளே சொல்லுஙக
நான் எப்படி சொல்லுறது, இன்னும் உன் மனைவியைப் நான் பார்க்கவில்லையே

Friday, April 07, 2006

போயே போச்சி...போயிந்தே...Its gone

குப்பன்:
நண்பா...உன்னை பார்க்க வரும் போது பயங்கர தலைவலி...
இவ்வளவு நேரம் உன் கூட பேசின பிறகு எங்க போச்சின்னே தெரியல

சுப்பன் :
வேறு எங்கேயும் போகல நண்பா....அது எங்கிட்ட வந்திடுச்சி

Thursday, April 06, 2006



குழந்தைக்கு எதிரான வன்முறை


Labels:

மல்லாக்க படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்
சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?

Labels:



சத்தியமா என்னோட அனுபவம் இல்லீங்கோ



கணவண்: ஏண்டீ...என்னாடி சாப்பாடு இது?.....சத்தியமா மனுசனால சாப்பிட முடியாது.


மணைவி: அப்படியா?....சரி சரி அப்ப நீங்க சாப்புடுங்க

ஒரு கோப்பையிலே என் 'கடி' யிருப்பு


காபி கப்பில்(cup) கைப்பிடி எந்த பக்கம் இருக்கும்?
:
:
யோசிங்க....
:
:
:
இடப்பக்கம்?.......தப்பு.....நல்லா யோசிங்க....
:
:
:
வலப்பக்கம்?.......தப்பு.....நல்லா யோசிங்க....
:
:
:
:
:
:
:
:
:
சரி நானே சொல்லுறேன்............
:
:
:
:
:
:
வெளிப்பக்கம் இருக்குமுங்க!!

Sunday, April 02, 2006



வெங்காயமும் அரசியல்வாதியும்



வெங்காயத்துக்கும் அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம்?

வெங்காயத்தை வெட்டினால் மட்டுமே மக்கள் கண்ணீர் சிந்துவர்