Thursday, August 31, 2006

நமக்கு தெரிஞ்சதெல்லாம் நாய்க்கு தெரியுமா?

குப்பன்: வாங்க வாங்க
(லொள்...லொள்)
சுப்பன்: அட என்னங்க உங்க வீட்டு நாய் இப்படி குரைக்குது?, பயமா இருக்கு
குப்பன்: பயப்படாம வாங்க, "குரைக்கிற நாய் எப்பவும் கடிக்காது
சுப்பன்: இது நமக்கு தெரியும் நாய்க்கு தெரியாதே

Wednesday, August 30, 2006

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்

அமைச்சர்: மன்னா..மன்னா
அரசர்: என்ன ஆயிற்று அமைச்சரே
அமைச்சர்:"எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்" என அறிவிக்காதீர் என்று கூறினேன், இப்போது பாருங்கள்
அரசர்:அதற்கு என்ன இப்போது?
அமைச்சர்:அனைவரும் அந்தப்புரத்தினுள் நுழைந்து விட்டனர்

Tuesday, August 29, 2006

ஓடி ஓடி உழைக்கணும்....

குப்பன் ஒரு வழியாக வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். பிரிவுபச்சார விழா முடிந்து வீடு வந்தவர் தனது சமையற்காரர் சுப்பனை கூப்பிட்டு "இனி எனக்கு ஓய்வூதியம் மட்டும்தான் வரும், சம்பளம் கிடையாது. அதனால் இனி விதவிதமாக சமைக்காமல் ஒரு சாம்பார் ஒரு பொறியல் மட்டும் போதும்" என்றார். அதற்கு சுப்பன், "சரி முதலாளி" என்று கூறிவிட்டு சமைக்கச் சென்றுவிட்டான்.

மதியம் சாப்பாடு குப்பன் கூறியவாரே இருந்து. உண்ட பின் நீர் அருந்த சமையல் அறைக்கு சென்ற குப்பன் அங்கு கண்ட காட்சியைக் கண்டு அதிர்ந்தார். காரணம் சுப்பன் "சாதம், முருங்கைக்குழம்பு, தக்காளி இரசம், தாளித்த தயிர், புடலங்காய்க் கூட்டு, உருளைப் பொறியல், அரிசி அப்பளம், மாங்காய் ஊறுகாய், வெள்ளரிக்காய் பச்சடி" என ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான். உடனே குப்பன் "எளிமையாய் சமைக்கச் சொன்னால் நீ இப்படி வித விதமாக சமைத்து இருக்க?" என்றார் அதிர்ச்சியுடன்.

அதற்கு சுப்பன் "முதலாளி!!, நீங்கதான் பணி ஓய்வு பெற்று இருக்கீங்க நான் இல்ல என்றான்"

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப் போனது ஏன்?

Labels:

Wednesday, August 16, 2006

டிங்..டாங்..டாங்....டிங்டாங்

குப்பன்: டேய்..மணி என்ன ஆவுதுன்னுப் பாரு
சுப்பன்: எனக்கு மணி பார்க்க தெரியாதே
குப்பன்: சரி, இரண்டு முள்ளும் எங்க இருக்குன்னு சொல்லு
(கடிகாரத்தை பார்த்துவிட்டு)
சுப்பன்: ரெண்டு முள்ளும் கடிகாரத்துக்கு உள்ளே இருக்கு

கல்யாண சமையல் சாதம்

பரிமாறுபவர்: யோவ் போன பந்தியிலயே நீ சாப்பிட்டதான?
சாப்பிடுபவர்: இல்லையே
பரிமாறுபவர்: யார ஏமாத்த பாக்குற?, கண்டிப்பா நீ சாப்பிட்ட, எனக்கு ஞாபக சக்தி அதிகம்
சாப்பிடுபவர்: சரி சரி, உனக்கு ஞாபக சக்தி அதிகம், எனக்கு ஜீரண சக்தி அதிகம், ஊத்து கொழம்ப..

பிறர் மணை நோக்கும் மாண்பு

அப்பா: டேய்..பக்கத்து வீட்டுல போய் சுத்தியல் வாங்கிண்டு வா
மகன்: சரிப்பா....
(சிறிது நேரம் கழித்து)
மகன்: அப்பா அவங்க கொடுக்கமாட்டாங்களாம்.
அப்பா: சரி..எதிர் வீட்டுல போய் வாங்கிண்டு வா
மகன்: சரிப்பா....
(சிறிது நேரம் கழித்து)
மகன்: அப்பா அவங்களும் கொடுக்கமாட்டாங்களாம்.
அப்பா: சரி விடு..சரியாண கஞ்சப்பசங்க...போயி நம்ம வீட்டுல இருக்கும் சுத்தியலைக் கொண்டு வா!!

Friday, August 11, 2006

தருவியா...தரமாட்டியா..தரலேன்னா உம்பேச்சிக் கா..

குப்பன்: என் மனைவி அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு பண்ணுறா
சுப்பன்: அப்படியா
குப்பன்: ம்ம்..போன வாரம் 500 ரூபாய் கேட்டா..
சுப்பன்: அப்புறம்
குப்பன்: அதுக்கு முந்தின வாரம் 1000 ரூபாய் கேட்டா..
சுப்பன்: ச்சீ..ரொம்ப மோசம்..இந்த மாதிரி அடிக்கடி பணத்தை வாங்கி என்ன பண்ணுறாங்க
குப்பன்: யாருக்கு தெரியும்..இது வரைக்கும் நான் கொடுத்ததே இல்லை

Thursday, August 10, 2006

சாப்பிட்டு சமத்தா வெளிய போயிடனும்

பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது

வருமுன் காப்போம்

பரிசோதகர்: டிக்கட் ப்ளீஸ்..
பயணி: இந்தாங்க....
பரிசோதகர்:என்னப்பா 2 டிக்கட் வாங்கியிருக்க?
பயணி:ஒண்ணு தொலைஞ்சிட்டா இன்னொன்னு உதவுமேன்னுதான்
பரிசோதகர்:ரெண்டும் தொலஞ்சிட்டா?
பயணி:பிரச்சணை இல்ல, எங்கிட்ட மாதாந்திர சீசன் டிக்கட் இருக்கு

ச்சீ..ச்சீ..ச்சீ..ச்சீச்சீச்சீ

இரண்டு சிறுவர்கள் சாலையோர பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் பேருந்து ஒன்று செல்ல இருவரில் ஒருவன் இரண்டு கைகளால் 'கீழே' மூடிக்கொண்டான்.
ஆனால் மற்றவனோ இரண்டு கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டான்.
பேருந்து கடந்த பின் கீழே மூடியவன் கேட்டான், "அட மடயா..மூடவேண்டியதை மூடாமல் முகத்தை ஏன்டா மூடின"
முகத்தை மூடியவன் "பஸ்ல போனவங்க என்ன பார்த்தாங்க என்பது முக்கியமில்ல, யாரோடத பார்த்தாங்க என்பதுதான் மேட்டரு" என்றான்.

Labels:

Wednesday, August 09, 2006

டிக்கட்..டிக்கட்....டிக்கட்..டிக்கட்....

கண்டக்டர்: டிக்கட்..டிக்கட்....டிக்கட்..டிக்கட்....

பயணி: யோவ்..அதான்..கை நிறைய டிக்கட் வச்சிக்கினு இருக்கியே...அப்புறம் எங்ககிட்ட ஏன் டிக்கட் கேக்குற?

Thursday, August 03, 2006

மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

தண்ணியில கப்பல் போனா ஜாலி
கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ காலி

Labels:

மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

தூங்கதுக்கு முன்னாடி தூங்கப் போறேன்னு சொல்ல முடியும்..ஆனா
முழிக்கிறதுக்கு முன்னாடி முழிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?

Labels:

மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

டீ கப்புக்குள்ள டீ இருக்கும்..ஆனா
வோர்ல்ட் கப்புக்குள்ள வோர்ல்ட் இருக்குமா?

Labels:

மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

மண்டையில போடுறது DYE
மண்டைய போட்டா DIE

Labels:

மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்..ஆனா
கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?

Labels:

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு

கணவண்: காபி ரொம்ப நல்லா இருக்கு...என்னாடி போட்ட
மனைவி: ம்ம்ம்ம்....2 ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே

பரிசோதகர்: யோவ்...உன்னோட டிக்கட்டை காட்டுய்யா..
பயணி: இந்தா பாருங்க
பரிசோதகர்: யோவ் இந்த டிக்கட்டு பழசு
பயணி: இந்த ரயில் மட்டும் என்ன புதுசா?

Wednesday, August 02, 2006

கேட்டால் மட்டும் கொடுங்க...தட்டினா மட்டும் திறங்க...

புதியதாய் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த ஒருவர் கையில் சில காகிதங்களை வைத்துக் கொண்டு பேப்பர் ஷ்ரட்டர் மெஷின் அருகே சென்று
காகிதத்தை இயந்திரத்தினுள் உள்ளே எப்படி போடுவது என யோசித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட சக ஊழியர் "நான் உங்களுக்கு உதவட்டுமா?" எனக் கேட்டுக் கொண்டே காகதங்களை வாங்கி இயந்திரத்தினுள் விட்டார்.

ஆனால் புதிய ஊழியர் இடத்தை விட்டு நகராமல் இயந்திரத்தின் மறு பக்கத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்

இதைக் கண்ட சக ஊழியர் "என்ன எதிர் பார்க்கிறீர்?" என்றார்

"இல்ல..நான் கொடுத்த காகிதங்களின் ஜெராக்ஸ் பிரதி எந்தப் பக்கம் வருமென பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் புதிய ஊழியர்.

Tuesday, August 01, 2006

யானைத் தோலை நீ பார்த்திருக்கியா?

குப்பன்: யானைத் தோலை நீ பார்த்திருக்கியா?
சுப்பன்: இல்லை, நீ பார்த்திருக்கியா?
குப்பன்: பார்த்திருக்கேன்!!
சுப்பன்: எங்க?
குப்பன்: யானை மேல!!

ஓரு புதிர்

நீங்க ஓரு அறையில் இருக்கறீங்கன்னு வச்சிக்குவோம். அந்த அறையில் 3 சுவிட்சிகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றே ஒன்று மட்டுமே பல்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதி இரண்டும் சும்மா உள்ளது. மேலும், இணக்கப்பட்ட பல்பு கூட பக்கத்து அறையில் உள்ளது.

இப்ப பிரச்சணை என்னவென்றால், எந்த சுவிட்ச் பல்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட விதிகளுடன் நீங்க கண்டுபிடிக்கணும்.

1. எந்த சுவிட்சை எத்தணை முறை வேண்டுமானலும் நீங்க போட்டு நிறுத்தலாம்.
2. பக்கத்து அறையில் பல்பு எரிவது உங்க அறையிலிருந்து தெரியாது
3. பக்கத்து அறைக்கு அதிகபட்சம் ஓரு முறை போய் விட்டு வரலாம்.


விடையைக் காண இடுகைகளைப் படிக்கவும்